Friday, 10 November 2017
பினாங்கு வெள்ளம்: உதவிப் பொருட்களை திரட்டுகிறது கோத்தா அலாம் ஷா சட்டமன்றத் தொகுதி அலுவலகம்
கிள்ளான் -
பினாங்கு வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற தொகுதி அலுவலகம் பொருளுதவிகளை திரட்டுகிறது.
உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள் (அரிசி, பால் டின், சார்டின், மீஹூன் உட்பட பல), போர்வை, ஆடைகள் போன்றவற்றை வழங்கப்படவுள்ளது.
இரு தன்னார்வல குழுக்கள் வரும் 14ஆம் தேதி பினாங்கிற்கு புறப்படவுள்ள நிலையில் உதவி செய்ய விரும்புபவர்கள் அலுவலகத்தை நாடலாம் எனவும் 03-33771103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் தனது முகநூல் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment