Tuesday 7 November 2017

'நிற்பேன்..., ஜெயிப்பேன்..., அமைச்சராவேன்...' - டான்ஶ்ரீ கேவியஸ் சூளுரை


கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிட்டு ஜெயிப்பேன்; அமைச்சராவேன் என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் உறுதிபடக் கூறினார்.
கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக சேவையாற்றி வருகிறேன். இத்தொகுதியை தேசிய முன்னணி தக்கவைத்துக் கொள்ளும் வகையில் களமிறங்ல்கி சேவையாற்றுகிறேன்.
ஆதலால் வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட நான் தயாராகி விட்டேன். ஆதலால் இத்தொகுதியில் நான் நிச்சயம் களமிறங்குவேன்.


இத்தேர்தலில் நான் 'நிற்பேன்..., ஜெயிப்பேன்..., அமைச்சராவேன்...' என மலேசிய தமிழ் பத்திரிகை, மின்னியல் ஊடக ஆசிரியர்கள், நிருபர்களுடனான தீபாவளி விருந்தோம்பல் நிகழ்வில் உரையாற்றுகையில் டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

மைபிபிபி, 'தாய்மொழி' நாளிதழ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மைபிபிபி கட்சியின் முதன்மை உதவித் தலைவர் டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ், மைபிபிபி தகவல் பிரிவு தலைவர் சைமன் ராஜ், விலாயா மைபிபிபி கட்சி தகவல் பிரிவுத் தலைவர் அர்விந்த், தாய்மொழி நாளிதழ் பணியாளர்கள் உட்பட பிற நாளிதழ், மின்னியல் ஊடக ஆசிரியர்கள், நிருபர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment