Wednesday 8 November 2017

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் பிரதமர்


 சுகுணா முனியாண்டி
பினாங்கு-

பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக காண நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் அவரது துணைவியார் டத்தின்ஶ்ரீ ரொஸ்மா மன்சோர்  பினாங்கிற்கு வருகையளித்தனர்.

பட்டர்வொர்த் பாடாங் லாலாங் ஏலீயர் ஏர் டவரில் உள்ள மலேசிய ரோயல் விமான படை தளத்தில் [RMAF]  காலை எறத்தாழ 10.15  மணியளவில்  வந்தடைந்த அவர்களை மாநில முதல்வர் லிம் குவான் எங் அவரது துணைவியார் பேத்தி சாவ் உட்பட மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்கள், மாநில செயலாளர் டத்தோஶ்ரீ ஃபரிசான் டாருஸ் நன்முறையில் வரவேற்றனர்.
பினாங்கு மாநில வெள்ள பேரிடர் நிவாரண மையங்களை நேரடியாகவும் பார்வையிட்டும் நிலவரங்களை  கண்டறியவும் பினாங்கிற்கு வருகை புரிந்துள்ளதாக பிரதமர் மத்திய செபெராங் பிறை மாட்ட இலாகாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்களின் பதுகாப்பதில் மத்திய அரசு தம் கடமையை நிலைநிறுத்தும் என கூறிய அவர், உதவிகள் யாவும்  மக்கள் நலன் கருதி  தான் வழங்கப்படுகின்றன் என  தெரிவித்தார். மேலும் பேசிய அவர்  அரசாங்க நீர்பாசன, வடிகால் அமைப்பு இயக்குனர் சப்ரி அப்துல் முலுக் ஆகியோரால் இந்த பிரச்சினையை சமாளிக்க காரணங்கள் கண்டறிவது குறித்த  குறுகிய கால நடவடிக்கைகள் பற்றி நஜிப் விளக்கினார்.

வெள்ள அபாய அளவை கண்காணிக்கும்  ஆய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் டத்தோஶ்ரீ நஜிப் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment