Wednesday 22 November 2017

கழுத்து இறுக்கப்பட்டதால் சிவராவ் மரணம் - சவப்பரிசோதனையில் உறுதி


சுங்கைப்பட்டாணி-
மூன்று பிள்ளைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கியதாக நம்பப்படும் கே.சிவராவின் கழுத்து இறுக்கப்பட்டதாலேயே அவர் மரணமடைந்தார் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில  குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ரஷ் தெரிவித்தார்.

5 வயது முதல் 8 வயது வரையிலான மூன்று பிள்ளைகளையும் தலையணை அழுத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சிவராவின் பிரேதப் பரிசோதனை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்று சிறார்களில் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக அவர் சொன்னார்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் தனது வீட்டின் அறையில் பிள்ளைகளும் தந்தையும் இறந்துக் கிடக்கக் காணப்பட்டார்.

கடன் தொல்லை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் வேளையில்  இதற்கான காரணத்தை போலீசார் ஆராய்வர் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment