Thursday 23 November 2017

வீட்டு வாடகை, பள்ளி கட்டணம் போன்ற கடனில் சிக்கி தவித்தார் சிவராவ்- போலீஸ் தகவல்



சுங்கைப்பட்டாணி-
வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி கட்டணம் செலுத்தாமை உட்பட பல கடன் பிரச்சினைகளில் சிவராவ் திண்டாடி வந்துள்ளார் என  விசாரணை வாயிலாக தெரிய வந்துள்ளது.

நாட்டையே உலுக்கியுள்ள மூன்று பிள்ளைகளை கொன்று தந்தையும்  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் சிவராவ் வீட்டு வாடகையைக் கூட கட்ட முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளார்.இரண்டு மாடி வீட்டில் கடந்த ஆறு வருடங்களாக அவர் வசித்து வந்துள்ளார்.

அதோடு மூன்று பிள்ளைகளின் கல்வி கட்டணத்தையும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார் என கோலமூடா சிஐடி தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் தெரிவித்தார்.

வங்கியில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கூட மீட்டெடுக்க முடியாத சிவராவ், அதிக கடன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதனை சமாளிக்க முடியாமலேயே அவர் இந்த விபரீத  முடிவை எடுத்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, அவரது மரணத்தில் உள்ள பின்னணியில் கடன் தொல்லைதான் உள்ளதா என்பது குறித்தும் போலீசார்  தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சிவராவின் மனைவி திருமதி காமினி தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார் என்பது  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment