Friday 10 November 2017

'பிரிம்' தொகையை விட சிறந்தது 'கிஸ்'


ஷா ஆலம்-
'பிரிம்' உதவித் தொகையை விட  தாய்மார்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள 'கிஸ்' (காசே ஈபு ஸ்மார்ட் சிலாங்கூர்)  திட்டம் மிக சிறந்தது என சிலாங்கூர் மாநில அரசு தற்காத்துள்ளது.

பிரிம் உதவித் தொகை கூட ஆண்டுக்கு 1,200 வெள்ளி தான் வழங்கப்படுகிறது. ஆனால் கிஸ் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2,400 வெள்ளி வழங்கப்படுகிறது என சுகாதாரம், சமூகநலன், மகளிர், குடும்ப நல ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டாரோயோ அல்வி தெரிவித்தார்.

பிரிம் தொகையை விட உயர்ந்து நிற்பது கிஸ் மட்டுமே. ஏனெனில் தாய்மார்களுக்காக மாதந்தோறும் 200 வெள்ளி வழங்கப்படுகிறது.
குடும்பத் தலைவர்களை மட்டுமே சென்றடைகின்றது 'பிரிம்' உதவித் தொகை.

ஆனால் குடும்ப மாதர்களுக்கு உதவிடும் வகையில் 'கிஸ்' திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment