Friday, 17 November 2017

வளர்ந்து வரும் இளைய படைப்பாளிகளுக்கும் தரமான படைப்புகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு வழங்குவீர்! டத்தோ கீதாஞ்சலி ஜி




உள்ளூர் படைப்பாளிகளின் அதீத படைப்புகள் கடந்த சில மாதங்களாக விவேகமாக வளர்ச்சி கண்டு வரும் வேளையில் அவர்களுக்கு நாம் கைகொடுத்தால் மேலும் சிறப்பான படைப்புகளை அவர்கள் வழங்குவார்கள். அவர்களின் படைப்புகள் சமீபக்காலமாக அதிகமாக வெளியீடு கண்டு வருகின்றது.

அந்த வகையில் அண்மையில் ஜாங்கிரி எனும் திரைப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் கைவண்ணத்தில் தயாரித்து வெளியீடு கண்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என டத்தோ கீதாஞசலி ஜி கேட்டுக் கொண்டார்.

அண்மையில் திரையீடு கண்ட ஜாங்கிரி திரைப்படத்திற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காத நிலையிலும் மனம் தளராது மக்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர் ஜாங்கிரி; திரைப்படக்குழுவினர்கள்.

உள்ளூர் கலைஞர்களின் முயற்சியில் வெளியீடு காணும் அதிகமான திரைப்படங்களுக்கான வரவேற்பு ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் பிறகு, திரைப்படத்தின் விமர்சனங்களை பார்த்த பின்னர் திரையரங்கிற்கு  படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை கைகூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய சில தினங்களாக மக்களிடமும் உள்ளூர் சினிமா இரசிகர்களிடம் கிடைக்கப்பெறும் விமர்சனங்கள் அதிகமானவர்களை ஈர்த்து வருகின்றது. மேலும், சில திரையரங்குகள் எவ்வித முன் அறிவிப்புமின்றி திரைக் காட்சிகளை ரத்துச் செய்ததால், படத்தை பார்க்கச் சென்ற அதிகமனோர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸ் என்யூ செண்ட்ரலிலுள்ள திரையரங்கில் ஒரு சிறப்பு காட்சியை மலேசிய இந்திய திரைப்பட பொழுதுப்போக்கு துறைச் சங்கத்தின் தலைவர் டத்தோ கீதாஞ்சலி ஜி மற்றும் அவரின் கணவர் டத்தோஸ்ரீ ஞானராஜா ஜாங்கிரி திரைப்படக்குழுவினர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி ஊடகத் துறையினரையும் தனது ஆதரவாளர்களையும் ஜாங்கிரி படம் பார்க்க வகை செய்தனர்.

No comments:

Post a Comment