Friday 3 November 2017

மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் "பயில்வோம்...படைப்போம்" (மாணவர் விழா 2017)


ஈப்போ-
பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பயனாகும் காரியங்களை முன்னெடுத்து ஏற்பாடு செய்வதில் சிறந்து விளங்கும் 'மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகத்தினர்' தங்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

இப்பள்ளியில் பயிலும் சுமார் 260 மாணவர்களும் பங்கெடுக்கும் வண்ணம்  'மாணவர் விழா 2017' நாளை 4.11.17 சனிக்கிழமை, காலை 9.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஓவியம் வரைந்து வண்ணமிடும்' பயிற்சியும் போட்டியும்  நான்காம், ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 'சிறுகதை எழுதும்' பயிற்சியும் போட்டியும் நடைப்பெறும்.
பயிற்சிகளை முன்னாள் மாணவர்களே வழிநடத்த, போட்டிகளின் நீதிபதிகளாக எழுத்தாளினி, கவிஞர் திருமதியோகி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சிவாலெனின், காவடி ஒப்பனைக் கலைஞர் மாரி ராஜா ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவடுவதோடு, படிப்பிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சாதனைகள் படைத்த மாணவ- மாணவியினருக்கு ஊக்குவிப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் பங்கேற்கும்படி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர். மேல் விபரங்களுக்கு: 016-5303538 (கலைசேகர்- கழகத்தின் ஆலோசகர் ).

No comments:

Post a Comment