Wednesday, 8 November 2017

குயின்ஸ் ஸ்திரீட் மாரியம்மன் ஆலயத்தில் இளவரசர் சார்ல்ஸ்


சுகுணா முனியாண்டி
பினாங்கு-

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்,  அவரின்  துணைவியார்  கார்ன்வாலின் டச்சஸ் பினாங்கு குயின்ஸ் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்திற்கு வருகையளித்தனர்.

அரச தம்பதியினர் ஆலயத்தை வந்தடைந்ததும் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ, சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர்.
உலக பாரம்பரிய வரலாற்று பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தின் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் அரச தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டது. ஆலயத்தை வலம் வந்த தம்பதியினர் அம்பாளின் தரிசனம் பெற்றனர் .
இந்த வரவேற்பு நிகழ்வின் போது பினாங்கு இந்து அறப்பணி வாரிய அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துக் கொன்டனர்.

No comments:

Post a Comment