கல்வி அமைச்சுக்கு சொந்தம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள மூன்று பள்ளிகள் மூடுவிழா காண தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதனை பினாங்கு மாநில கல்வி இலாகா இயக்குனர் சாரி ஒஸ்மான் உறுதிப்படுத்தினார்.
தென்கிழக்காசியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த கான்வெண்ட் பள்ளியே மூடப்படவுள்ளன. லைட் ஸ்திரீட் கான்வெண்ட் தேசியப்பள்ளி, லைட் ஸ்திரீட் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளி (சிஎல்எஸ்), கான்வெண்ட் புலாவ் திக்குஸ் (சிபிதி) ஆகிய பள்ளிகள் கல்வி அமைச்சுக்கு சொந்தமான இடத்தில் இல்லாததால் மூடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகள் அமைந்துள்ள நிலத்திற்கு சொந்தகாரரான 'சிஸ்டர் ஆஃப் இன்ஃபாண்ட் ஜீசஸ் (Sisters of Infant Jesus) என்ற அறவாரியம் நிலங்களை விற்கும் நோக்கில் அதனை தாங்களே எடுத்துக் கொள்ள போவதாக கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த மூன்று பள்ளிகளில் அடுத்தாண்டு முதல் புதிதாக மாணவர்களுக்கான சேர்க்கை இருக்காது. இப்போதுள்ள மாணவர்களே இப்பள்ளிகளின் கடைசி பிரிவு மாணவர்கள் ஆவர். இந்த பள்ளிகளை மூடுவதற்கான செயல்நடவடிக்கை தொடங்கி விட்டது
2022ஆம் ஆண்டில் இப்பள்ளிகள் மூடப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சாரி ஒஸ்மான், அதனை உறுதியாக சொல்ல முடியாது என பதிலளித்தார்.
1852ஆம் ஆண்டு கட்டப்பட்ட லைட் ஸ்திரீட் கான்வெண்ட் பள்ளியே தென்கிழக்காசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த பெண்கள் பள்ளியாகும். அதேபோன்று புலாவ் திக்குஸ் கான்வெண்ட் பள்ளி 1900ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டது ஆகும்.
No comments:
Post a Comment