Friday, 3 November 2017

உயிர்பலிகளை இன்னும் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்க போகிறோம்? – நடிகர் விஷால்

சென்னை-
தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் கனமழை, புயல், வெள்ளம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மின்சாரம் தாக்கி அப்பாவிகள் பலியாகின்றன சம்பவங்கள் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

வறட்சியின் போது விவசாயிகளும் மழையின்போது அப்பாவி மக்களும் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? 
தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்பட போகிறோமா? அப்பாவிகளை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா? என்ற கேள்விகளை நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான விஷால் முன்வைத்தார்.

சென்னையில் சரியான கட்டமைப்பு வசதியை பெறவில்லை என்பதைத் தான் இந்த பலியானவர்களின் மரணங்கள் காட்டுகின்றன. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் சென்னைக்கு மழை வெள்ளத்தை தாங்கும் திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிறுமிகள் பலியானது நிர்வாக தவறு இல்லை; அது ஒரு குற்றம் என்று அண்மையில் இரு சிறுமிகள் பலியானதை விஷால் சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment