Friday 17 November 2017

உலகளாவிய சிறுகதை எழுதும் போட்டியில் இரண்டாம் பரிசை தட்டி சென்றார் 'மகிழம்பூ' கலைசேகர்


புனிதா சுகுமாறன்
கோலாலம்பூர்-
மலேசிய தமிழ் மணிமன்றம்,  மதுரை காமராச பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய உலகளாவிய சிறுகதை எழுதும் போட்டியில் ஈப்போ 'மகிழம்பூ' கலைசேகர் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார்.

அண்மையில் கோலாலம்பூர்  மஇகா நேதாஜி மண்டபத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மொரிசியஸ், கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கேரளா போன்ற ஒன்பது நாடுகளிலிருந்து சுமார் 416 சிறுகதை எழுத்தாளர்களுக்கிடையிலான போட்டியின் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் சிறுகதை நூற்றாண்டு விழா என்ற தலைப்பில் நடந்தேறிய இவ்விழாவில் காமராசர் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுகதை போட்டி பங்கேற்பாளர்களின் சிறந்த 100 சிறுகதைகள் தொகுக்கப்பட்ட நூல் வெளியீடு, 75 வயதுக்கு மேற்பட்ட மலேசிய மூத்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்குதல் என பல அங்கங்கள் இடம்பெற்றன.

இந்த சிறுகதை போட்டியில் இரண்டாம் நிலை வெற்றியாளராக மகிழம்பூ கலைசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். அவருக்கு புத்தகத்தின் பிரதியும் ஊக்குவிப்பு நிதியும் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment