Thursday, 2 November 2017

இரட்டை இலை சின்னம் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு



புதுடெல்லி-
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ள தலைமை தேர்தல் ஆணையம் அதன் மீதான விசாரணையை மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என பிளவு கண்டுள்ள அணிகளிடையே கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை யார் கைப்பற்றுவது என மோதல் நீடிக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை இரு தரப்பினரும் அணுகினர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பினரும் பிரமான பத்திரங்களை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, டி.டி.வி தினகரன் தரப்பினரின் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பினரின் வழக்கறிஞர்கள் சட்ட விதிமுறைகளை சொல்லி தங்களுக்கு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வாதிட்டனர்.

இரு தரப்பு விசாரணைகளை கேட்டறிந்த பின்னர் மீண்டும் இவ்விவகாரம் 6ஆம் தேதி விசாரிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment