Tuesday 14 November 2017

ஆர்ஓஎஸ் உத்தரவு: மறுதேர்தலை நடத்தியது ஜசெக



ஷா ஆலம்-
ஜசெகவின் மறுதேர்தலில் டான் கோக் வெய் அக்கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று ஷா ஆலம், மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜசெக மறுத் தேர்தலில் அமரர் கர்ப்பால் சிங்கின் புதல்வரும் பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ அக்கட்சியின் துணைத் தலைவராகவும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் உதவித் தலைவராகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கட்சியின் மூத்தத் தலைவரான லிம் கிட் சியாங் 1,199 வாக்குகள் முதல் நிலையில் வெற்றி பெற்றார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் கோபிந்த் சிங் டியோ இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றார்.

ஜசெகவின் 2012, 2013ஆம் ஆண்டுக்கான மாநாடும் தேர்தலும் செல்லாது என அறிவித்த தேசிய சங்கங்களின் பதிவிலாகா (ஆர்ஓஎஸ்), மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என விடுத்த உத்தரவுக்கேற்ப இந்த தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment