Friday, 3 November 2017

பாலியல் உறவுக்கு அழைத்த ஆசிரியர் இடமாற்றம்


கோலாலம்பூர்-
தொலைபேசி உரையாடலின்வழி ஓர் இளம் பெண்ணை பாலியல் உறவுக்கு  அனுப்பி வைக்குமாறு பெற்ற தாயிடமே கேட்டுக் கொண்ட ஆசிரியரை இட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கல்வி துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தெரிவித்தார்.

56 வயதுடைய அந்த ஆசிரியர் தற்காலிகமாக மாவட்ட கல்வி இலாகாவில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.. விசாரணை முடிந்த பின்னர், ஆசிரியர் மீதான குற்றம் நிரூபணமானால் பள்ளியிலிருந்து உடனடி நீக்கப்படுவதோடு கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரின் குரல் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதனை கடுமையாக கருதும் கல்வி அமைச்சு, விசாரணைக்கு பின்னரே உறுதியான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்றார் அவர்.

No comments:

Post a Comment