Thursday 2 August 2018

ரோஸ்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நகைகள் சுங்கத் துறையிடம் அறிவிக்கப்படவில்லை


கோலாலம்பூர்- 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தங்க நகைகள் சுங்கத் துறையிடம் அறிவிக்கப்படவில்லை என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தில்  ரோஸ்மா மன்சோர் பெற்றுள்ளதாக கூறப்படும் 44 நகைகள் குறித்து எவ்வித பதிவுகளும் இல்லை என அவர் மக்களவையில் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதியாளர் சுங்க வரி செலுத்தப்படவில்லையென்றால் அது ஒரு குற்றமாக கருதப்படும்.

போலீஸ் அறிக்கைகள் எந்தவொரு குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை என்றால் 1967 சுங்கத் துறை சட்டவிதிகளின் படி அது ஒரு குற்றமாகும். மேலும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது வழிவகுக்கும் என அவர் சொன்னார்.

ஆயினும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்த தற்காப்பு அறிக்கையில் நகைகள் வாங்கியுள்ளதை ரோஸ்மா மறுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் டத்தோஶ்ரீ நஜிப்பின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 110 கோடி வெள்ளி மதிப்பிலான நகைகள்,  ஆடம்பர கைப்பைகள், கண்ணாடிகள், கடிகாரங்கள் ஆகியவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment