Saturday 11 August 2018

இடைபட்ட காலத்திலேயே பக்காத்தான் ஆட்சி கவிழலாம்- டான்ஸ்ரீ அனுவார் மூசா


கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே மத்திய அரசாங்கத்தை அம்னோ கைப்பற்றக்கூடும் என்று அதன் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா குறிப்பட்டார்.

இந்த மூன்று மாத காலத்திலேயே பக்காத்தான் ஹரப்பானின் சேவைதரம் மோசமடைந்தருப்பதால் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள்ளாகவே மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் இழக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

' இடைபட்ட காலத்திற்குள்ளாகவே மத்திய அரசாங்கத்தை கைப்பற்றுவோம். ஐந்தாண்டு காலம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

'ஜசெக உட்பட எந்தவொரு கட்சியுடனும் ஒத்துழைத்து செயல்பட அம்னோ தயாராக உள்ளது.'
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள ஜசெக, பிகேஆர், அமானா, பெர்சத்து ஆகிய கட்சிகளுடன் ஒத்துழைத்து செயல்பட தயாராக உள்ளது.

மலாய்க்காரர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையிலான கோரிக்கைகளை ஜசெக ஏற்றுக் கொண்டால் அதனுடன் ஒத்துழைப்பதில் எவ்வித தயக்கமும் இருக்காது.

21ஆம் நூற்றாண்டுக்கு தேவையான உருமாற்றத்தை நோக்கி அம்னோ செயல்பட வேண்டியது அவசியமாகிறது என்ற

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியில் இடம்பெற்றிருந்த  பல கட்சிகள் விலகிக் கொண்டதை அடுத்து தற்போது அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் மட்டுமே இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment