ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பேரா மாநிலத்தின் முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கம் கண்டது.
பேரா மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஸூடின் ஷா சட்டமன்றக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மாற்றம் வேண்டும் என்பதற்காக பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறந்த சேவையை வழங்கிட தவறக்கூடாது.
சுயநல அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்திய சுல்தான் நஸ்ரின், மக்களுக்கான அரசாங்கமாக இது திகழ்ந்திட வேண்டும் என்றார்.
இக்கூட்டத் தொடரின்போது சட்டமன்ற சபாநாயகர் டத்தோ ஙே கூ ஹாம், மாநில மந்திரி பெசார் அஹ்மாட் பைசால் அஸுமு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கெடுத்தனர்.
No comments:
Post a Comment