Sunday 12 August 2018

துணைத் தலைவர் தேர்தலில் தோல்வி கண்டாலும் அமைச்சர் பதவியை துறக்க தேவையில்லை- ரபிஸி


கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சி தேர்தலில் தோல்வி கண்டாலும் அமைச்சர் பதவியை டத்தோஸ்ரீ அஸ்மின் அலி துறக்க தேவையில்லை என துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் க்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்து ரபிஸி ரம்லி களமிங்குகிறார்.

கட்சி பதவியையிம் அமைச்சரவை பதவியையும் ஒன்றுபடுத்தி பார்க்க வேண்டாம்.

இத்தேர்தலில் அஸ்மின் அலி தோல்வி அடைந்தாலும் தற்போது வகித்து வரும் போருளாதார விவகார அமைச்சர் பதவியை துறக்க வேண்டியதில்லை.

அமைச்சரவை பதவியை பிரதமர் துன் மகாதீர் வழங்கியிருக்கிறார். ஆதலால் அதனை கட்சி விவகாரத்துடன் ஒப்பிட வேண்டியதில்லை என அவர் சொன்னார்.

பிகேஆர் கட்சி தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அஸ்மின் அலி துன் மகாதீரின் ஆதரவாளர் என கூறப்பட்டது.

No comments:

Post a Comment