சென்னை-
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் மிகவும் மோசமடைந்து வருவதால் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர் மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நிலவுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் கட்சி தொண்டர்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின், அழகிரி அகியோர் சந்தித்து பேசியுள்ளதும் தமிழகத்தில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.
No comments:
Post a Comment