Tuesday 21 August 2018
தேமு அதிகாரத்தில் எஸ்எஸ்டி சட்ட மசோதா நிறைவேற்றம்
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கொண்டு வந்த விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) சட்ட மசோதாவை இன்று மேலவை அங்கீகரித்தது.
கடந்த மக்களவை கூட்டத்தின்போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனை, சேவை வரி சட்ட மசோதா மேலவை அங்கீகாரத்திற்காக வாசிப்புக்கு கொண்டு வரப்பட்டது.
மேலவையில் தேசிய முன்னணி உறுப்பினர்களே அதிகம் உள்ள நிலையில் இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
தற்போதைய 55 மேலவை உறுப்பினர்களில் தேசிய முன்னணியைச் சேர்ந்த 32 உறுப்பினர்களும் 3 பாஸ் உறுப்பினர்களும் உள்ளனர்.
அதோடு இன்றைய மேலவையில் 2018 சேவை வரி சட்ட மசோதா, பொருள், சேவை வரி ( அகற்றம்) சட்ட மசோதா, 2018 குடிநுழைவு சட்ட மசோதா ஆகிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
விறபனை, சேவை வரி சட்டம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment