Tuesday 14 August 2018

சுடுநீர் கொட்டியதில் காயமடைந்த மாணவர்களை சந்தித்தார் சிவநேசன்

ரா. தங்கமணி

ஈப்போ-
பள்ளி அறிவியல் நேரத்தின்போது சுடுநீர் கொட்டியதால் 17%  காயமடைந்த மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சைகளும் சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவிருப்பதாக பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.

சித்தியவான், ஸ்ரீ மகா கணேசா தமிழ்ப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்கள் மீது சுடுநீர் கொட்டியது. இதில் ஒரு மாணவருக்கு 17%, மற்றொரு மாணவருக்கு 5%, இன்னொரு மாணவருக்கு 4% என காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 4% காயம் ஏற்பட்டுள்ள மாணவர் சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
5% காயம் அடைந்த மாணவருக்கு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதோடு 17% காயமடைந்த மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதோடு நிபுணத்துவ மருத்துவர்களின் ஆலோசனையோடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மருத்துவர்களின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மனநிறைவு கொண்டுள்ளனர் என இன்று ஈப்போ மருத்திவமனைக்கு வருகை புரிந்து மாணவர்களை சந்தித்த பின்னர் செய்தியாள ர்களிடம் பேசிய சிவநேசன் இவ்வாறு கூறினார்.

மேலும், எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு யாரையும் குறை சொல்ல முடியாது என குறிப்பிட்ட அவர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் மீது மனநினைவு கொள்ளாத பெற்றோர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வது அவர்களது உரிமையாகும் என கூறினார்.

No comments:

Post a Comment