ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்தியர்களின் தாய்க்கட்சியாக திகழும் மஇகாவின் தொகுதித் தலைவர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெறவுள்ள நிலையில் பல தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
மஇகாவில் முன்பு செய்யப்பட்ட சட்டவிதிகளின் மாற்றத்தின் காரணமாக மூன்று தவணைக்கு மேல் தொகுதித் தலைவராக பதவி வகித்தவர்கள் மீண்டும் அப்பதவியை தக்க வைக்க முடியாது என்பதால் பல தொகுதித் தலைவர்களின் தலைகள் உருளலாம்.
அதோடு, தற்போது தொகுதித் தலைவர்கள் போட்டியிட முடியாத தொகுதிகளில் அப்பதவிக்கு கடுமையான போட்டி நிலவலாம்.
மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுள்ள நிலையில் காலத்தின் அவசியம் கருதி மஇகாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கு இன்றைய தொகுதித் தலைவர்களுக்கான வேட்புமனுத் தாக்கலும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதித் தலைவர்களுக்கான தேர்தலும் அடித்தளமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment