Wednesday 8 August 2018

மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்குங்கள்- ரஜினிகாந்த் வலியுறுத்து


சென்னை-
கலைஞர் மு.கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

வழக்குகள் இருப்பதால் மெரினாவில் கரைஞரின் உடலை அடக்கம் செய்ய முடியாது என்று தமிழக அரசு தெரிவித்ததால் திமுக தொண்டர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், 'மதிப்பிற்குரிய அமரர் கலைஞர்அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதுதான் நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும்  தகுந்த மரியாதை' என டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment