Wednesday 8 August 2018

பக்காத்தானின் அமைச்சர்கள், எம்பிக்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்-எம்ஏசிசி

ஈப்போ-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது  சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று மலேசிய லஞ்ச ஒழிப்ப ஆணையத்தின் துணை ஆணையர் டத்தோ சம்சூல் பஹாரின் முகமட் ஜாலில் தெரிவித்தார்.

பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட 30 நாட்களுக்குள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் எனவும் இதனை பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான ஊழல் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு அங்கீகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாக அதிகாரிகளும் தங்களது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என இந்த குழு சம்மதித்துள்ளது. இந்த சொத்து விவரங்களை அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யவும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

முன்பு மத்திய அரசாங்கத்தில் இருந்தவர்கள் தங்களது சொத்து விவரங்களை பிரதமரிடமும் மாநில அரசில் இடம்பெற்றவர்கள் மந்திரி பெசாரிடமும் வழங்கி வந்தனர்.

ஆனால் இப்போது சொத்து விவரங்களின் நகலை மலேசிய லஞ்ச ஆணையத்திடம் வழங்குவது கட்டாயம் என அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment