Friday 24 August 2018
இரு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா? டத்தோஶ்ரீ நஜிப் சவால்
கோலாலம்பூர்-
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது தொடங்கப்பட்ட சீனாவின் இரு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பில் நடப்பு அரசாங்கம் அரச விசாரணை ஆணையம் (ஐஆர்சி) அமைக்குமா? என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சவால் விடுத்தார்.
சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் துன் மகாதீர், கிழக்கு கடற்கரை ரயில் பயணம் (இசிஆர்எல்), இரு எரிவாய் குழாய் இணைப்பு திட்டம் போன்றவற்றை மலேசிய அரசாங்கம் ரத்து செய்வதாக அறிவித்தார்.
இவ்விரு திட்டங்களும் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மயான காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது அவசியம் என டத்தோஶ்ரீ நஜிப் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment