Wednesday 15 August 2018

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமை- பிரதமர் மகாதீர்


கோலாலம்பூர்-
சிவப்பு அடையாள அட்டை கொண்டுள்ள  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறினார்.

ஏற்கெனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற அவர் அதற்காக கால அவகாசத்தை தெரிவிக்கவில்லை.

பக்காத்தானில் உள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், செனட்டர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், 60 வயதுக்கு கீழ்பட்ட மலேசியரில் ஒருவரை தாய், தந்தையராக கொண்டுள்ளவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான சட்டத் திட்டத்தில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரு சொன்னார்.

இந்த அறிவிப்பின் மூலம் சிவப்பு அடையாள அட்டையை கொண்டுள்ள 3,407 இந்நியர்கள் மலேசிய குடியுரிமையை பெறவுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என 100 நாள் திட்ட வாக்குறுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment