Monday, 13 August 2018

வெ. 18 பில்லியன் காணவில்லை என்றால் எங்கே உள்ளது என்பதை நிரூபியுங்கள்- நஜிப்புக்கு மகாதீர் சவால்

கோலாலம்பூர்-
பொருள், சேவை வரியின் (ஜிஎஸ்டி) 18 பில்லியன்  வெள்ளி காணாமல் போகவில்லை என்றால் அது எங்கே உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு இந்நாள் பிரதமர்  துன் மகாதீர் சவால் விடுத்தார்.

'அந்த பணம் காணாமல் போகவில்லை. பின்னர் அது எங்கே உள்ளது. அதனை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்' என துன் மகாதீர் வலியுறுத்தினார்.

ஜிஎஸ்டி வரியின் மூலம்  வசூலிக்கப்பட்ட 18 பில்லியன்  வெள்ளி காணாமல் போனது குறித்து நிதியமைச்சர் லிம் குவான் எங் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ நஜிப் உட்பட பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கடந்த தேசிய முன்னணி ஆட்சியின் போது அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரியை பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றியதும் அதனை 0%ஆக அறிவித்தது.


No comments:

Post a Comment