Wednesday 8 August 2018

சம்பள விகிதம் குறைவாக இருப்பதால் இளைஞர்கள் அதிகம் வெளியேறுகின்றனர்- சிவநேசன்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநிலத்தில் சம்பள விகிதாச்சாரம் மிக குறைவாக இருப்பதால் இளைஞர்கள் அதிகமானோர் வேலை வாய்ப்பிற்காக பிற இடங்களுக்கு செல்கின்றனர் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு ஆகிய பெரு நகரங்களில் கிடைக்கப்பெறும் அதிகளவு ஊதியம் போன்று திறந்த நிலையிலான போக்கு இளைஞர்கள் இம்மாநிலத்திலிருந்து வெளியேறுவதை குறைக்கலாம்.

வெளியிடங்களில் காணப்படும் நாகரீகமான வாழ்க்கை இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்கள் வேலை வாய்ப்பை தேடி வெளியே செல்கின்றனர்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை  உறுதி செய்யும் வகையில் மாநில அரசாங்கம் ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுத்தால் நிச்சயம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது சங்காட் ஜெரிங் சட்டமன்ற உறுப்பினர் அஹ்மாட் சைடி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சிவநேசன் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment