Tuesday 2 January 2018

'பிறந்தது புத்தாண்டு; காத்திருக்குது கனவுகள்' ; மக்களின் கருத்து - பகுதி -1


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
2017 கடந்து இன்று 2018 புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த வருடத்தில்  நினைத்த, கனவு கண்ட பல லட்சியங்கள், திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்போம். அதில் சிலவற்றை செய்யாமல் விட்டு வைத்திருப்போம்.

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் அதே போன்ற கனவுகளும் திட்டங்களும் நம்மிடம் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை அடைவதற்கான வியூகங்களையும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டியது நமது கடமையாகும். அவ்வகையில் பிறந்திருக்கும் 2018இல் அணிவகுத்து நிற்கும் லட்சியங்களை 'பாரதம்' மின்னியல் தளத்துடன் பகிர்ந்துக் கொள்கின்றனர் பலர். அவர்களின் கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.

* முகமட் அரிஃப் - பிரிம் இயக்கத் தலைவர்
-  மலேசிய வாழ் மக்கள் அனைவரும் சிறப்பாக புத்தாண்டை வரவேற்பதோடு அல்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்கிறார் முகமட் அரிஃப்.


* அப்துல் ரசாக் இப்ராஹிம் ஷா- பிரிம் இயக்கத்தின் துணைத் தலைவர்
- மலேசியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு மக்களிடையே நீடிக்கும் சுபிட்சமும் அமைதியும் மேலோங்கி இருப்பதோடு அனைவரின் வாழ்விலும் முன்னேற்றமும் பொருளாதார ரீதியிலான மேம்பாடும் தொடர வேண்டும்.


* மேகலா
 - மலேசிய மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதோடு  இந்த புத்தாண்டின்  திட்டமாக  உயர்கல்வியை தொடரவிருப்பதாகவும், ஏதாவது ஒரு புது மொழியை கற்றுகொள்ளவிருப்பதாகவும் அதேவேளையில் ஏதாவது ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயனம் சென்று வருவதையும் வகுத்துள்ளேன்.


* ஜேம்ஸ் ரத்தினம்
- பிறந்திருக்கும் 2018 அனைவருக்கும் தித்திப்பான ஆண்டாக திகழ்வதோடு வகுத்துள்ள திட்டங்கள் யாவும் வெற்றிகரமாக அமைய வேண்டும்.


* லெட்சுமி நாயர்
- 2018 புத்தாண்டின் திட்டமாக புதிய அங்காடி (ஸ்டால்) உணவகத்தை திறக்கவிருப்பதாகவும் பலவகையான இந்திய உணவு வகைகளை தயார் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என இலக்கு கொண்டுள்ளேன்.

- தொடரும்....

No comments:

Post a Comment