Saturday 20 January 2018

கீஃபார்மில் பல்நோக்கு மண்டபம் அமைப்பதற்கு வெ.50,000 - டான்ஶ்ரீ கேவியஸ் உறுதி


கேமரன் மலை-

கேமரன்மலையின் வளர்ச்சிக்கு இதர வட்டாரங்களைப் போலவே, கீ ஃபார்ம் பகுதி வாழ் மக்களும் தங்களது பிளவுபடாத ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கும் தேவையான உதவியை செய்ய வேண்டியது எனது கடமையாகும். எனவே, கீ ஃபார்ம் சீனக் கோவில் நிர்வாகத்தினர் வைத்துள்ள கோரிக்கைக்கு ஏற்ப பல்நோக்கு மண்டபம் அமைப்பதற்கு  50,000 வெள்ளி உதவி நிதி வழங்கவிருக்கிறேன் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் வாக்குறுதி வழங்கினார்.

கீ ஃபார்மில் சீனப் பள்ளியும் சீனக் கோயிலும் இருக்கின்றன. பல ஆண்டுகளாக இங்கு ஒரு பல்நோக்கு மண்டபத்தை அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறோம். டான்ஶ்ரீ கேவியஸ் அதற்கான தொடக்கத்தை ஆரம்பித்து வைத்தால், ஆண்டவன் ஆசியால் கீ ஃபார்ம் மக்கள் பல்நோக்கு மண்டபத்தைக் கொண்டிருப்பர். இது தொடர்பாக நீங்கள் எங்களுக்கு ஏதேனும் உதவியை செய்ய வேண்டும் என்று சீனக் கோயில் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில் டான்ஶ்ரீ கேவியஸ் 50,000 வெள்ளி வழங்குவதாக அங்கேயே அறிவித்தார். இந்த அறிவிப்பினால், கீ ஃபார்ம் மக்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்துப் போயினர். டான்ஶ்ரீ கேவியஸ் மீதான நம்பிக்கையும் இந்த அறிவிப்பின் வழி வலுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், இங்குள்ள சீனக் கோயிலில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மதிய உணவில் கலந்து கொண்ட டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment