Sunday 14 January 2018

சிந்தனை மாற்றத்தின் வழி வளமான வாழ்வை உருவாக்குவோம் - சிவகுமார்


ஈப்போ-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். அதேபோல் இன்று பிறந்திருக்கும் தை மாதம் அனைவரது வாழ்விலும் புது அத்தியாயத்தை உருவாக்கிட வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் வலியுறுத்தினார்.

உழைப்பின் வெற்றியை கொண்டாடி மகிழும் இந்த நாளில் இந்தியர்கள் உழைப்பதற்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை உணர்த்துகிறது. கடுமையாக உழைத்து வாழ்வை மேம்படுத்துவதில் தன்னிகரற்றர்கள் நாம்.

உழவுக்கு துணை நிற்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி கூறி கொண்டாடும் இந்த நாளில் இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் பொருளாதார ரீதியில் மேம்பாடு கண்டவர்களாக உருவெடுக்க வேண்டும்.

பொங்கி வரும் பாலை போல அனைவரது வாழ்விலும் வசந்தம் வீச வேண்டும். ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலைபெறுவதோடும் சிந்தனை மாற்றத்தின் மூலம் நமது வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள வழிவகுத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment