Wednesday 24 January 2018

1எம்டிபி விவகாரத்தை கைவிடவில்லை- பிரதமர் நஜிப்


கோலாலம்பூர்-
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி 1எம்டிபி விவகாரத்தை கைவிட்டு விடவில்லை என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

நிர்வாக பலவீனத்தால் பெரும் நஷ்டத்தை அடைந்த ஒரே மலேசியா மேம்பாட்டு  நிறுவன விவகாரம் பல்வேறு அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டது.

எதிர்க்கட்சியின் பல்வேறு குற்றச்சாட்டுகளினால் 1எம்டிபி உலகளவில் பேசப்படும் விவகாரமாக உருவெடுத்தது. நிர்வாக பலவீனத்தால் இந்நிறுவனத்தின் நஷ்டம் ஏற்பட்டது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஆராய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது ஒரு வரலாறாகும் என புர்சா மலேசியா பெர்ஹாட், மே பேங்க் ஆகியவை ஏற்பாடு செய்த மலேசியா முதலீடு 2018 நிகழ்வில் உரையாற்றும்போது டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment