Tuesday 23 January 2018

'நாற்காலி' வீசிய சந்தேக பேர்வழி இன்னும் அடையாளம் காணப்படவில்லை - போலீஸ்


கோலாலம்பூர்-
பந்தாய் டாலாம், ஶ்ரீ பந்தாய் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 'நாற்காலி வீசி எறிந்து 15 சிறுவனுக்கு மரணம் விளைவித்த 'சந்தேக பேர்வழியை' போலீஸ் இன்னும் அடையாளம் காணவில்லை என  கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் மூத்த துணை ஆணையர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

கடந்த வாரம் வீசியெறியப்பட்ட 'நாற்காலி' விழுந்து 15 வயது சிறுவன் எஸ்.சதீஸ்வரன் மரணம் அடைந்த சம்பவம் மலேசியர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

'இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக பலர் அழைக்கப்பட்டுள்ளனர். இக்குடியிருப்பாளர்கள், சாட்சிகள் என இதுவரை 43 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சந்தேகப் பேர்வழியை இன்னும் அடையாளம் காண முடியவில்லை' என்றார் அவர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் ஐந்து பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்படும் என கடந்த புதன்கிழமை கோலாலம்பூர் போலீஸ் தலைவர்  டத்தோ மஸ்லான் லஸிம்  ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்த மரபணு பரிசோதனையின் முடிவு இன்னமும் கிடைக்கப்பெறாத நிலையில் அதன் முடிவுக்காக காத்திருப்பதாக ருஸ்டி தெரிவித்தார்.

No comments:

Post a Comment