Thursday 11 January 2018

ஆஸ்ட்ரோ 'பொங்கு தமிழ் விழா'- திரைப்பட நட்சத்திரங்களோடு மக்களின் குதூகல கொண்டாட்டடம்

கோ.பத்மஜோதி

கிள்ளான் -
ஆஸ்ட்ரோவின் 'பொங்கு தமிழ் விழா' கிள்ளான்,  ஜிம் பேரங்காடி வளாகத்தில் ஆயிரக்கணக்கான  மக்கள் ஆதரவுடன் அண்மையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்தியர் கலாச்சார நிகழ்வுகளை முன்னிறுத்தி நடந்தேறும் 'பொங்கு தமிழ் விழா' 2013ஆம் ஆண்டு முதல் மக்களின் பேராதரவோடு நடத்தப்பட்டு
வருகிறது.

இந்த விழாவில் தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம், உரி அடித்தல், கோலப்போட்டி ஆகியவற்றோடு பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.

இவ்விழாவில் ஆஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவுத் தலைவர் டாக்டர் இராஜாமணி, ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, தமிழ்த் திரைப்பட நடிகர்கள் விஜய் சேதுபதி, அருண் பாண்டியன்,  இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், தயாரிப்பாளர் ராஜேஸ்குமார், ஜூங்கா படத்தின் இசையமைப்பாளர் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய  ராஜாமணி, மறக்கப்பட நமது கலாச்சார, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு 'பொங்கு தமிழ் விழா' மூலம் ஆஸ்ட்ரோ உயிரூட்டி வருவது பெரிமைக்குரியதாகும் என கூறினார்.

இதனிடையே,  சிலம்பாட்டம், கரகாட்டம், புலி ஆட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரை என 15க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளின் படைப்பு 'பொங்கு தமிழ் விழாவின் சிறப்பு அம்சமாக அமைந்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு சென்ற பயிற்சி பெற்ற உள்ளூர் கலைஞர்கள் தங்களுடைய  படைப்புகளை சிறப்பாக வழங்கினர்.

இரவு 7.00 மணிக்கு மேல் நடந்த கலை நிகழ்ச்சியில் தமிழக பின்னணி பாடகர்கள் அந்தோணிசாமி, அவரின் துணைவியார் ரீத்தா அந்தோணிசாமி ஆகியோரோடு உள்ளூர் கலைஞர்களான பாடகர் ரூபன் ராஜ், பாடகி தர்ஷினி, ஆகியோரும் பாடல்களை பாரி ரசிகர்களை மகிழ்வித்தனர். 'சொடக்கு மேல' பாடலை பாடி ரசிகர்களின் ஏகோபித்த கைத்தட்டலை பெற்றார்.

No comments:

Post a Comment