Sunday 14 January 2018

ஒற்றுமை வளர்த்து பொருளாதாரத்தில் மேம்பாடு காண்போம்- டத்தோ இளங்கோ


ஈப்போ-
தமிழர்களின் திருநாளான 'தை' பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ வலியுறுத்தினார்.

உழவர்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டாடும் நன்னாளில் நாமும் நன்றியை மறவாது நமது வாழ்வுக்கு துணை நின்றவர்களை நினைவு கூறுவோம்.

அனைவரிடமும் ஒற்றுமை வளர்த்து பொருளாதாரத்தில் மேம்பாடு கண்ட சமூகமாக இந்திய சமுதாயம் முன்னேற்றம்  காண்பதை உறுதி கொள்வோம் என அவர் தமது  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment