Monday 1 January 2018

"வளப்பமிகு 2018 நமக்காக காத்திருக்கிறது" - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நஜிப்



கோலாலம்பூர்-
"வளப்பமிகு 2018 நமக்காக காத்திருக்கிறது. மலேசியாவுக்கான  வெற்றிகளின் மைல் கல்கள் தொடரும்" என நாளை பிறக்கவுள்ள 2018 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் டத்தோஶ்ரீ  நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.

நாட்டின்  60ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் உட்பட பல நிகழ்வுகளை சுட்டி காட்டிய டத்தோஶ்ரீ நஜிப், கடந்து விட்ட 2017ஆம் ஆண்டு மலேசியா பல அம்சங்களில் மைல் கல்லாக அமைந்திருந்ததை அவர் பட்டியலிட்டார்.

சுதந்திரத்திற்கு பின்னர் நாடு அடைந்துள்ள வெற்றிகளுக்கும் தேச நிர்மாணிப்புக்கும் காரணமாக இருந்த முன்னோர்களை பெருமை கொள்வோம்.

பிறக்கவிருக்கும் 2018ஆம் ஆண்டு வளமானதாக இருக்கும் என நம்புவோம். உலக வங்கியின் கூற்றுபடி மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.  அந்த முன்னேற்ற தடத்தில் இன்னும் பல மைல்கல் வெற்றி அமையவிருக்கிறது.

நாட்டின் வருங்கால தலைமுறைக்காக 'தேசிய உருமாற்றம் 2050' காத்திருக்கிறது. இந்த மாபெரும் பணியை நிறைவேற்ற எல்லோரும் ஆதரவு வழங்குவீர் என நம்புவதாக புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர நஜிப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment