Wednesday 31 January 2018

வழக்கில் வெற்றி; முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார் திருமதி இந்திரா காந்தி

தனது மகள் தேவதர்ஷினியுடன் திருமதி இந்திரா காந்தி...

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
ஒருதலைபட்ச மதமாற்ற வழக்கை 9 ஆண்டுகளாக நடத்தி அதில் வெற்றி கண்டுள்ள முன்னாள் பாலர்பள்ளி ஆசிரியை திருமதி இந்திரா காந்தி முருகப் பெருமானுக்கு தனது நேர்த்திக் கடனைச் செலுத்த புறப்பட்டார்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் விழாவான தைப்பூச விழாவை நாளை உலகமெங்கும் உள்ள பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லா என்ற கே.பத்மநாபன்  மூன்று பிள்ளைகளையும் தனது  அனுமதியின்றி மதமாற்றம் செய்ததை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தினார்.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் ஒருதலைபட்சமாக மதமாற்றம் செய்தது செல்லத்தக்கது அல்ல எனவும் மதமாற்றம் செய்யப்பட்டது ரத்து செய்யப்படுவதாகவும் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தன்னுடைய சட்டப் போராட்டத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி கொள்ளும்  வேளையில் முருகப் பெருமானுக்கு பால்குடம் ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தவிருப்பதாக திருமதி இந்திரா காந்தி கூறினார்.

No comments:

Post a Comment