Friday 12 January 2018

பிரதமர் பதவிக்கு ஜசெக குறிவைக்கவில்லை- வீ.சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
பிரதமர் பதவிக்கு ஜனநாயக செயல் கட்சி (ஜசெக) ஒருபோதும் குறிவைத்ததில்லை. நாட்டின் பெரும்பான்மை மக்களாக மலாய்க்காரர்கள் உள்ள நிலையில் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப  மலாய்க்காரர் ஒருவரே பிரதமர் பதவி ஏற்பதை எதிர்க்கட்சி கூட்டணி உறுதி கொண்டிருந்தது என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

முன்பு பக்காத்தான் ராக்யாட்  ஆட்சி அமைத்தால் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமே பிரதமராக பதவியேற்பார் என கூட்டணியில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது பக்காத்தான் ஹராப்பானில் பிரதமர் வேட்பாளர டத்தோஶ்ரீ அன்வாரே என கூறப்பட்டது.

ஆயினும் தற்போது அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால் இக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் பிரதமராக பதவியேற்கக்கூடும் என விஷம பிரச்சாரம் மேற்கொண்டவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகையதொரு திட்டத்தை ஜசெக கொண்டிருக்கவில்லை.

லிம் கிட் சியாங்கை பிரதமர் வேட்பாளர் என மலாய்க்காரர்கள் மத்தியில்  தூண்டிவிட்டு பக்காத்தானின் வெற்றியை சீர்குலைக்க நினைத்த தரப்பினருக்கு பக்காத்தான் கூட்டணி அறிவித்துள்ள அதிரடி முடிவு அவர்களை திக்கு முக்காட வைத்து விட்டது என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment