Saturday 27 January 2018

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம்: வீர மரணமடைந்த கம்மேண்டோ ஜே பி நிராலாவின் 'அசோக் சக்ரா' விருது


புதுடெல்லி-
இந்திய நாட்டின் 69ஆவது குடியரசு தினம் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தின விழாவில் குடியரசு தலைவர் நாம்நாத் கோவிந்த் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.

தலைநகர் டெல்லியில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஹுக், மலேசிய பிரதமர் முகம்மது நஜிப் அப்துல் ரசாக், தாய்லாந்து பிரதமர் ஜெனரல் சான் ஓ சா, மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ டடெர்டே, புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல் போல்க்யா வாதாதுலா, லாவோஸ் பிரதமர் தோங்லூன் சிஸோலித் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் சென் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் ஏதேனும் ஒரு நாட்டின் தலைவரே பங்கேற்கும் நிலையில் இன்று 10 நாடுகளின் தலைவர்களின் பங்கேற்றனர்.

வீரர்களின் அணிவகுப்புடன் வருகை தந்த குடியரசுத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

இவ்விழாவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா பகுதியில் உள்ள ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  விமானப்படையைச் சேர்ந்த கம்மேண்டோ ஜே பி நிராலா, மூன்று தீவிரவாதிகளை சுட்டுக்கொன்று தானும் வீர மரணம் எய்தினார். அவரது இந்த தியாகத்தை பாராட்டி இந்த ஆண்டுக்கான 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் குடியரசு தலைவர்  இந்த விருதை வழங்கினார்.

No comments:

Post a Comment