Tuesday 2 January 2018

'பிறந்தது புத்தாண்டு; காத்திருக்குது கனவுகள்' ; மக்களின் கருத்து - பகுதி -2


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
2017 கடந்து இன்று 2018 புத்தாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த வருடத்தில்  நினைத்த, கனவு கண்ட பல லட்சியங்கள், திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்போம். அதில் சிலவற்றை செய்யாமல் விட்டு வைத்திருப்போம்.

பிறந்திருக்கும் இந்த புத்தாண்டில் அதே போன்ற கனவுகளும் திட்டங்களும் நம்மிடம் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை அடைவதற்கான வியூகங்களையும் வழிமுறைகளையும் வகுக்க வேண்டியது நமது கடமையாகும். அவ்வகையில் பிறந்திருக்கும் 2018இல் அணிவகுத்து நிற்கும் லட்சியங்களை 'பாரதம்' மின்னியல் தளத்துடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.  அவர்களது கருத்துகளின் தொடர்ச்சி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.


* 'மக்கள் சேவகர்' செல்வராஜு
- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மக்களுக்கு செய்து வரும் சேவைகள் இவ்வாண்டும் தொடரப்போகிறேன்.

* முரளி
-  மலேசிய வாழ் அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளும் வேளையில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்பதுதான் தம்முடைய இலக்கு.

* சிவா
- அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காப்புறுதி துறையில் இன்னும் துடிப்புடன் செய்லாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளேன்.


* கணேசன்
- மலேசிய வாழ் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த அனைவரது வாழ்விலும் ஏற்றமும் செழிப்பும் மேலோங்க வேண்டும்.

லோகரூபன் (அருள்லோகா)
-  2018 புத்தாண்டு  தொடக்கம் ஒரு சிறப்பானதாக அமையும் என நம்பிக்கைக் கொள்வதாக ஏ.பி.டிரன்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் லோகாரூபன் தெரிவித்தார்.

2018இல் ஒரு சிங்கள் டிரக் ஆல்பத்தை வெளியிட திட்டம் கொண்டிருப்பதோடு பல நிறுவனங்களை உள்ளடக்கிய குழும நிறுவனத்தை தோற்றுவிக்கவும்  எண்ணம் கொண்டுள்ளேன். தற்போது 3 நிறுவனங்களைக் கொண்டுள்ள நிலையில் மேலும் 2 நிறுவனங்களை தோற்றுவித்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

- தொடரும்.....

No comments:

Post a Comment