Wednesday, 10 January 2018

ஊடகங்களும் நிருபர்களும் விலை போய் விடக்கூடாது- மக்கள் கருத்து; பகுதி -1

புனிதா சுகுமாறன்

'ஒரு போர் வீரன் ஏந்தும் வாளின் கூர்மை போன்றது பேனா.' பேனாவை ஏந்தும் எல்லோராலும் சிறந்த எழுத்தாளர்களாக உருவெடுத்து விட முடியாது.

'பேனாக்காரன்' எனும் அடைமொழியுடன் சமூகத்தில் உலா வரும் நிருபர்கள் சமுதாயத்தின் போராளிகளாக பார்க்கப்படுகின்றனர். நிருபர்களும் ஊடகங்களும் மக்களின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பவையாக இருக்க வேண்டும். இதுவே பலரது ஆசையாகவும் இருக்கலாம்/ இருக்கிறது.

ஆனால், இன்றைய சூழலில் ஊடகங்களும் நிருபர்களும் மக்களின் போராளியாக திகழ்கின்றனரா? சமுதாயத்தின் குரலை ஒலிப்பதாக இன்றைய ஊடகங்கள் திகழ்கின்றனா?

ஜனநாயக நாட்டில் மக்கள் போராளியாக சித்திரிக்கப்பட வேண்டிய ஊடகங்கள், நிருபர்களை பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர், அவர்களின் மனவோட்டங்கள் என்ன?, மக்கள் மத்தியில் ஒரு பொறுப்புணர்வோடு செய்திகளை சேகரிக்கும் நிருபர்கள் மக்களிடத்தில் எவ்வாறு பேசப்படுகின்றனர்? போன்றவற்றை 'பாரதம்' மின்னியல் ஊடகம் கண்ணோட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

* 'பலகுரல் மன்னன்' மிம்மிகிரி கலைஞர் குமரன்
- ஊடகம் என்பது மக்களுக்கு உண்மை செய்திகளை கொண்டு செல்ல வேண்டும்.  ஒரு செய்தியாளர் தன் கடமையை உணர்ந்து செய்திகளை வெளியிடு வது சிறப்பானதாகும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து செய்திகள் வெளியிட்டால் சிறப்பாக அமையும்.

இளங்கோவன்- கோலாலம்பூர்
-  ஒரு  செய்தியாளர் உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடத்தில் திணிக்கக்கூடாது.  இன்றைய காலகட்டத்திற்ககு ஏற்ற பயனுள்ள செய்திகளை  மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

* லோகரூபன் - ஈப்போ
-  ஊடகங்கள்  தேவையில்லாத சினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட மலேசியாவில் தற்போது நடக்கும் உண்மை சம்பவங்களை,   செய்திகளை  வெளியிட வேண்டும்.

உண்மை செய்திகள் வெயிடும்போது நிருபர்கள்,  ஊடககங்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன.  இதுபோன்ற சிக்கல்களை எற்படுத்துபவர் யாராக இருந்தாலும் அவர்களை சமுதாயத்தின் முன்  அடையாளப்படுத்துபவர்களே மக்கள் எதிர்பார்க்கும்சிறந்த  ஊடகவியலாளர்கள்

தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கு உழைக்கும் நிருபர்களும் ஊடகங்களும் விலை போய் விடக்கூடாது. அப்போதுதான் ஊடக சுதந்திரம் கட்டிக் காக்கப்படும்.

- தொடரும் -

1 comment:

  1. வாழ்த்துகள். நல்ல முயற்சி.

    ReplyDelete