Sunday 7 January 2018

அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைகேடு- குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் அவசியம்- பேராக் மந்திரி பெசார்

புனிதா சுகுமாறன்

ஈப்போ-
புந்தோங் ஃபர்ஸ்ட் கார்டன்  அடுக்குமாடி குடியிருப்பில்  சுகாதாரம் கடைபிடிக்கப்படாமல் சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதற்காக காரணம் கண்டறியப்பட வேண்டும் என பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் வலியுறுத்தினார்.

இங்கு சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால் இங்குள்ள மக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்காமல் குப்பைகளை ஆங்காங்கே கொட்டுவது பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேண வேண்டும். இல்லையேல் இங்கு சுகாதார, பாதுகாப்புக்கு பெரும் பிரச்சினை ஏற்படலாம் என இங்கு மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணி நடவடிக்கையின்போது டத்தோஶ்ரீ  ஸம்ரி அப்துல் காதீர்
குறிப்பிட்டார்.

இங்குள்ள குடியிருப்பாளர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரம், பாதுகாப்பு குறித்து இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு விளக்கமளிப்பு நடத்தப்பட வேண்டும்.

மேலும், ருக்குன் தெத்தாங்கா அமைப்பு உருவாக்கப்பட்டு சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்  என அவர் சொன்னார்.
இந்நடவடிக்கையில் மாநில மகளிர், குடும்ப, சமூகநல, வீடமைப்பு, ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரோஸ்னா காசிம், ஈப்போ மாநகர் மன்ற மேயர் டத்தோ ஸம்ரி மான், புந்தோங் தொகுதி  மைபிபிபி ஒருங்கிணைப்பாளர் டத்தோ நரான் சிங், ஈப்போ பாராட் மஇகா துணைத் தலைவர் பாலையா, பேராக் மாநில மஇகா தலைவி தங்கராணி உட்பட மாநகர் மன்ற ஊழியர்கள், குடியிருப்புவாசிகள், கட்சியினர் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment