Sunday 14 January 2018

வாழ்வில் ஏற்றமும் சந்தோஷமும் நிலைபெறட்டும்- திருமதி தங்கராணி


ஈப்போ-
தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்தது 'தை' மாதம்.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதுபோல் எல்லோரது வாழ்விலும் ஏற்றம் காண்பதையே இம்மாதம் குறிப்பிடுகிறது.

புது பானையில் பொங்கலிட்டு 'பொங்கி வரும்' பாலை போல ஆரோக்கியமும் சந்தோஷமும் அனைவரவது வாழ்விலும் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும்.

கலாச்சார விழாவாக பொங்கல் திகழ்ந்தாலும் அதன் உள்ளடக்கங்கள் மனித வாழ்வியலை உள்ளடக்கியதாகும். இந்நாளில் அனைவரிடமும் அன்பு செலுத்தி ஒற்றுமையை வலுபடுத்தி இனிதே பொங்கல் நாளை கொண்டாடுவோம் என  மஇகா மகளிர் பிரிவு துணைத் தலைவியும் பேராக் மாநில மஇகா தலைவியுமான திருமதி தங்கராணி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment