சுங்கை சிப்புட் கல்வி சமூகநல இயக்கத்தின் ஏற்பாட்டில் பல பொது இயக்கங்கள் ஆதரவில் 'மாபெரும் பொங்கல் விழா' மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 28ஆம் தேதி சுங்கை சிப்புட் மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாலை 6.00 மணி முதல் மாநாட்டு மையத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 1,000 பேர் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இரவு 8.00 மணி தொடக்கம் கலை நிகழ்ச்சியோடு அரங்கேறவுள்ள
இந்நிகழ்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவிநிதியும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு அன்பளிப்பு வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ப.தியாகராஜன், தொழிலதிபர் ஏ.கே.சக்திவேல், சுங்கை சிப்புட் மஇகா தலைவர் இளங்கோவன்ன முத்து, மலேசிய அபிராம் சமூகநல இயக்கத்தின் தலைவர் சண்முகம் கிருஷ்ணன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.
மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு லோகநாதன் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment