Sunday, 14 January 2018

புது வசந்தம் வீசட்டும்; வாழ்வு செழிக்கட்டும்- டத்தோ சம்பந்தன்


கோலாலம்பூர்-
உழைப்பின் உன்னதத்தை விவசாயத்தின் வெற்றியை கொண்டாடி மகிழும் திருநாள் 'பொங்கல்'. தன்னுடைய உழவுக்கு துணை நின்ற சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி கூறி கொண்டாடும் நன்னாளில் தனது வாழ்வில் வசந்தம் வீசுந்தம் விவசாயிகள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

அவ்வகையில் புது பானையில் பொங்கலிடும்போது பொங்கி வரும் பாலை போல  அனைவரது வாழ்விலும் ஏற்றமும் மகிழ்ச்சியும் நிலைபெற்றிட வேண்டும்.

இந்த பொங்கல் நாளில் எடுக்கும் இன்பகரமான முடிவுகள் தனது குடும்பத்தை மட்டுமல்லாது நாடு அமைதியாகவும் சுபிட்சமாகவும் இருப்பதை உறுதி செய்வதோடு நாட்டின் மேம்பாட்டில் நமது பங்கையும் உறுது செய்வோம் என ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவரும் செனட்டருமான டத்தோ எம்.சம்பந்தம் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment