Wednesday 10 January 2018

தேமுவை வீழ்த்த தகுதியானவர் மகாதீர்- ஹிண்ட்ராஃப் வேதமூர்த்தி

கோலாலம்பூர்-
அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவே தகுதியானவர் என ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார்.

'நாட்டை சிறந்த முறையில் நிர்வகிப்பதோடு அடுத்த தலைமுறையினரையும் வசப்படுத்தும் சக்தியை அவர் கொண்டுள்ளார்'. மகாதீர் மலாய்காரர்களின் இதயங்களின் சிம்மாசனமிட்டுள்ளார்.

துன் மகாதீரை பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது  புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக
அமையலாம்.

அரசாங்கத்தை மாற்றுவதற்கு இது வலிமையானதோடு அம்னோவின் ஆதரவாளர்களைக்கூட கவர்ந்திழுப்பதற்காக அடித்தளமாகவும் உள்ளது.
நாட்டின் உருமாற்றத்தை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ள இந்த கடினமாக வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சருமான வேதமூர்த்தி கூறினார்.

No comments:

Post a Comment