Monday, 8 January 2018
'பிரதமர்' துன் மகாதீர், 'துணைப் பிரதமர்' டத்தோஶ்ரீ வான் அஸிஸா, 8ஆவது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார்- நம்பிக்கைக் கூட்டணி அறிவிப்பு
ஷா ஆலம்-
நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) பிரதமர் வேட்பாளராக பிரிபூமி பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று ஐடிசிசி மண்டபத்தில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் மாநாட்டில் இந்த முடிவு ஏகமனதாக ஏற்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்றினார் முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் இக்கூட்டணியின் பிரதமராக பதவியேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவரும் பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் துணைப் பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தற்போது சிறையில் உள்ள டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அரச மன்னிப்பு பெறப்பட்டு 8ஆவது பிரதமராக பதவியேற்பார் எனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக இக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோ ஷைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment