Saturday 4 August 2018

ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டும் நாடு திவாலாகவில்லை- நிதியமைச்சர்

புத்ராஜெயா-
ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரியை அரசாங்கம் அகற்றியுள்ளபோதிலும் அரசாங்கம் திவாலாகவில்லை என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

ஜிஎஸ்டி வரியை அகற்றினால் நாடு திவாலாகி  விடும் என முந்தைய அரசாங்கம் கூறி கொண்டிருந்தது. ஆனால் அந்த வரியை அகற்றிய போதிலும் நாடு சீரான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது எனவும் மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன எனவும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு இறுதி வரைக்குமான எரிவாயு மானியம் வெ.3 பில்லியன்  தயார்படுத்தப்பட்டுள்ளது எனவும்  ரோன் 95 லிட்டருக்கு 2.2.0 வெள்ளியாகவும் டீசல் 2.18 வெள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் விலை 74 அமெரிக்க டாலராக உயர்வு கண்டுள்ள நிலையில் இதற்கு முன்  52 அமெரிக்க டாலராக இருந்தது.

No comments:

Post a Comment