பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.எம்.எஸ்
சரா இயக்கத்தில் பென்ஜி, ஜெகன், கல்பானா,
லோகன் உட்பட மேலும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ள 'மாமா மச்சான்' மலேசிய தமிழ் திரைப்படம் நாடு முழுவதுமுள்ள
18 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இத்திரைப்படத்தின் முதல் நாள் திரையரங்கு வசூல் முழுவதையும் குழந்தை
பிரிஷாவின் மருத்துவச் செலவிற்கு நன்கொடையாக வழங்குவது என்ற முடிவை 'மாமா மச்சான்'
இயக்குநர் சாராவும் நடிகர் பென்ஜியும் ஒரு காணொளி மூலம் அறிவித்தனர்.
18
திரையரங்குகளில் முதல் நாள் 5 காட்சிகள் என மொத்தம்
90 காட்சிகளின் வசூல் முழுவதும் குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு
நல்லுதவி செய்யும் வகையில் அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாமா மச்சான்' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குழந்தை
பிரிஷாவின் மருத்துவ அறுவை சிகிச்சை செலவுக்காக வழங்கப்படவுள்ளது என்ற தகவல் தற்போது
மலேசிய இந்தியர்களிடையே மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுள்ளதோடு போற்றுதலுக்குரிய விஷயமாக
கூறப்படுகிறது.
குழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில்
நடக்க இருக்கிறது.
இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3 லட்சம் வெள்ளி
வரை செலவாகும் நிலையில் 'மாமா மச்சான்' திரைப்பட குழுவினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பு பொது மக்களிடமும்
மலேசிய கலைஞகளிடையேயும் பெரும் வரவேற்பை மட்டுமல்லாமல் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிரிஷாவிற்கு உதவி தேவைப்படுவது
குறித்து பலர் அறியவும்
'மாமா மச்சான்' குழுவினரின் இந்த அறிவிப்பு அமைந்திருந்தது.
குழந்தை பிரிஷாவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் நலமுடன்
பல்லாண்டு காலம் வாழவேண்டும் என வாழ்த்துகிறோம் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment